Samaiyalarai

Showing posts with label குருமா வகைகள். Show all posts
Showing posts with label குருமா வகைகள். Show all posts

February 3, 2011

பூண்டு இல்லாத குருமா | kurma

பூண்டு இல்லாத குருமா



தேவையானவை:


  1. நீங்கள் விரும்பும் காய்கறிகள் (நறுக்கியது) – 2 கப்
  2. பெரிய வெங்காயம் – 2
  3. தக்காளி – 3
  4. தேங்காய்த் துருவல் – 1 கப்
  5. முந்திரிப்பருப்பு – 6
  6. உப்பு – தேவைக்கு




அரைக்க:

  1. சோம்பு – அரை டீஸ்பூன்
  2. பச்சை மிளகாய் – 4 அல்லது 5
  3. இஞ்சி – 1 துண்டு
  4. மல்லித்தழை – ஒரு கைப்பிடி


தாளிக்க:

  1. பட்டை - 2
  2. லவங்கம் - 2
  3. ஏலக்காய் - 2
  4. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  5. நெய் – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:


  • காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள்.
  • வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
  • தேங்காய்த் துருவலையும் முந்திரியையும் அரைத்துத் தனியே வையுங்கள். 
  • பிறகு, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரையுங்கள்.
  • இப்போது, எண்ணெய், நெய் இரண்டையும் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். 
  • வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். 
  • இதனுடன் தேங்காய் விழுது, வேகவைத்த காய்கறி சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.


பூண்டு விரும்பாதவர்களுக்கான ஸ்பெஷல் குருமா

ஈஸி குருமா | easy kurma


February 1, 2011

செட்டி நாடு குருமா| cetti nadu kuruma

செட்டி நாடு குருமா!


தேவையானவை:

    1. கத்தரிக்காய் – 5
    2. உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) – 2
    3. பெரிய வெங்காயம் – 2
    4. தக்காளி – 4
    5. உப்பு – தேவைக்கு
    6. கறிவேப்பிலை, மல்லித்தழை —சிறிதளவு
    7. பூண்டு – 2 பல்

    தாளிக்க:

    1. கடுகு – அரை டீஸ்பூன்
    2. சோம்பு – கால் டீஸ்பூன்
    3. பிரிஞ்சி இலை – 1
    4. எண்ணெய் – 3
    5. டேபிள் ஸ்பூன்


    அரைக்க:
    1. தேங்காய்த் துருவல் – 1 கப்
    2. காய்ந்த மிளகாய் – 6 முதல் 8 வரை
    3. தனியா – 1 டேபிள் ஸ்பூன்
    4. சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன்

    செய்முறை:


    • முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
    • பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள்.
    • கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
    • இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள்.
    • பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
    • உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
      இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்றது. 

    January 31, 2011

    உருளைகிழங்கு குருமா | potato kuruma

    உருளைகிழங்கு குருமா



    தேவையான பொருட்கள் :
    உருளைகிழங்கு குருமா
    1. உருளைகிழங்கு - 1/4 கிலோ
    2. தக்காளி - 3
    3. தேங்காய் -  1 / 2 மூடி
    4. சின்ன வெங்காயம் - 100 கிராம்
    5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    6. பொட்டுகடலை - 1 / 2 தேக்கரண்டி
    7. பட்டை - 4
    8. கிராம்பு - 4
    9. சோம்பு - அரை தேக்கரண்டி
    10. கசகசா - அரை தேக்கரண்டி
    11. கறிவேப்பிலை - ஒரு கொத்து
    12. மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    13. மல்லித் தூள்- 1 1 /2 தேக்கரண்டி
    14. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    15. கொத்து மல்லி தழை - சிறிதளவு
    16. உப்பு - தேவையான அளவு


    செய்முறை:
    • உருளைகிழங்கை முதலில் தனியே வேகவைத்துக் கொள்ளவும்.
    • அடுத்து சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
    • பிறகு வாணலியில் என்னை விட்டு பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
    • அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
    • அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பிறகு வேகவைத்த உருளைகிழங்கை சேர்க்கவும்.
    • அதனுடன் மல்லிதுல், மிளகைதுள் சேர்த்து நன்றாக கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து மல்லி தூள்  பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
    • பிறகு தேங்காய், சோம்பு, கசகசா, பொட்டுகடலை செய்து நன்றாக அரைத்து, அடுப்பில் உள்ள உருளைகிழங்கு கலவையுடன் சேர்த்து, மிதமான தேயில் கொதிக்க விடவும்.
    • குழம்பு நான்கு கொதித்ததும், கொத்துமல்லி தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

    Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

    TOP