செட்டி நாடு குருமா| cetti nadu kuruma
செட்டி நாடு குருமா!
தேவையானவை:
- கத்தரிக்காய் – 5
- உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) – 2
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 4
- உப்பு – தேவைக்கு
- கறிவேப்பிலை, மல்லித்தழை —சிறிதளவு
- பூண்டு – 2 பல்
தாளிக்க:
- கடுகு – அரை டீஸ்பூன்
- சோம்பு – கால் டீஸ்பூன்
- பிரிஞ்சி இலை – 1
- எண்ணெய் – 3
- டேபிள் ஸ்பூன்
அரைக்க:
- தேங்காய்த் துருவல் – 1 கப்
- காய்ந்த மிளகாய் – 6 முதல் 8 வரை
- தனியா – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன்
செய்முறை:
- முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
- பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள்.
- கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
- இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள்.
- பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
- உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்றது.
0 comments:
Post a Comment