Samaiyalarai

February 1, 2011

பனீர் பட்டர் மசாலா | paneer mattar masala

பனீர் பட்டர் மசாலா!


தேவையானவை:
  • பனீர் – 200 கிராம்
  • பெரிய வெங்காயம் -3
  • தக்காளி – 4
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • தனியா தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
  • வெண்ணெய் – 50 கிராம்
  • ஃப்ரெஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன்
(பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அதுதான் ஃப்ரெஷ் க்ரீம்!)
  • காய்ந்த வெந்தயக் கீரை – 2 டீஸ்பூன்.
செய்முறை:

  1. பனீரை சிறு துண்டுகளாக்குங்கள்.
  2. வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரையுங்கள்.
  3. இப்போது, வாணலியில் வெண்ணெயைப் போட்டு லேசாக உருக்குங்கள். அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை ‘ஸிம்’மில் வையுங்கள்.
  4. வாணலியில் உள்ளவை நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
  5. பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.
  6. கடைசியாக, பனீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.
  7. ஃப்ரெஷ் க்ரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.

0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP