வெஜிடபிள் குருமா | vegetable kurma
வெஜிடபிள் குருமா
தேவையானவை:
- கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு - சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது – 2 கப்
- பெ. வெங்காயம் – 2
- தக்காளி – 3
- தேங்காய்த் துருவல் – 1 கப்
- பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
- பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
அரைக்க:
- இஞ்சி – 1 துண்டு
- பூண்டு – 5 பல்
- சோம்பு – அரை டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 5
செய்முறை:
- காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.
- 2 நிமிடம் கழித்து, ஜாக்கிரதையாக வெயிட்டைத் தூக்கி, ப்ரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள்.
- வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள்.
- தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
- இப்போது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
- வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
- பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
- வெஜிடபிள் குருமா ரெடி!
குறிப்பு:
காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டுக் கழுவி எடுத்து, துண்டுகளாக்கி, கடைசியாகக் காய்கறிகளைப் போடும்போது சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது.
0 comments:
Post a Comment