பீஸ் மசாலா | spice masala
பீஸ் மசாலா
தேவையானவை:
- பட்டாணி – 1 கப்
- பெரிய வெங்காயம் – 3
- தக்காளி – 3
- புளிக்காத தயிர் – கால் கப்
- இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
- தனியா தூள் – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
- வெண்ணெய் – 50 கிராம்
- உப்பு – தேவைக்கு ஏற்ப
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை:
- பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள்.
- வெங்காயத்தை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள்.
- எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்கி, ஆறவைத்து அரைத்தெடுங்கள்.
- வெண்ணெயை உருக்கி, அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன், உப்பும் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள்.
- பிறகு, தயிர், தேவையான தண்ணீர், வேகவைத்த பட்டாணியை சேர்த்து, கரம் மசாலாவைத் தூவி, 2 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.
0 comments:
Post a Comment