பால் பணியாரம் | pal paniyaram
பால் பணியாரம்
தேவை:
- பச்சரிசி - 100 கிராம்
- உளுந்து - 75 கிராம்
- பசும்பால் - 200 கிராம்
- தேங்காய் பால் - ஒரு டம்ளர்
- சர்க்கரை - 100 கிராம்
- ஏலக்காய் பொடி - சிறிதளவு
- பொரிக்க (எண்ணெய்) - தேவையான அளவு.
செய்முறை:
- பச்சரிசியையும், உளுந்தையும் ஐந்து மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைக்கவும்.
- இந்த மாவை சுண்டைக்காய் சைசாக கிள்ளி எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க.
- வெள்ளை நிறமாக பொரித்து எடுங்க.
- பொறித்து எடுத்த தயாராக வைத்திருக்கும் பாலில் போடுங்க.
- டேஸ்டியான பணியாரம் ரெடியாகிடுச்சு!
பசும்பாலைக் காய்ச்சி, இறக்குகிற சமயம் கடைசியாக தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். அதில் சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும்.
0 comments:
Post a Comment