Samaiyalarai

February 20, 2011

பஜ்ஜி | paji | pajji

பஜ்ஜி





தேவை:

  • பச்சரிசி - 400 ௦௦ கிராம் 
  • உளுத்தம்பருப்பு - 100 கிராம்
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • வற்றல் - 4  
  • காயம் - சிறிதளவு
  • பஜ்ஜிபொடி - 1 சிட்டிகை 




செய்முறை:
  1. அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக ஊற வையுங்க.
  2. அரைமணி நேரம் ஊறவைத்த பின்பு பருப்பை இட்லிக்கு ஆட்டுவது போல் நன்றாக ஆட்டி எடுங்க.
  3. அரிசியை ஆட்டும் பொது வற்றல், காயம், உப்பு சேர்த்து நன்றாக ஆட்டி பஜ்ஜி பொடியையும் உளுந்து மாவையும் சேர்த்து நன்றாக கலக்குங்க.
  4. மாவு அதிகம் கெட்டியாக இல்லாமலும் இளக்கமாக இல்லாமலும் இருக்க வேண்டும்.
  5. வாணலியில் எண்ணையைக் காயவைத்து, பின்பு வாழைக்காய், கத்தரிக்காய், உருளைகிழங்கு, பெரிய வெங்காயம், குடை மிளகாய், அப்பளம், பிரியபட்டதை வளைக்கை சீவும் உதவியால் வெட்டி மாவில் தோய்த்து கையும் எண்ணெயில் சுட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுங்க.
குறிப்பு:
பஜ்ஜி மெதுவாக இல்லாவிட்டால் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கொள்ளலாம்.
ரொட்டியையும் பஜ்ஜி மாவில் தோய்த்து ரொட்டி பஜ்ஜி சுடலாம். 

0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP