மசாலா தோசை | masala dosa | potato masala dosai
மசாலா தோசை
masala dosa |
தேவை:
- தோசை மாவு தயார் செய்து வைத்துகொண்டு,
- உருளைகிழங்கு - 250 கிராம்
- மிளகாய் - 4 நறுக்கியது
- வெங்காயம் - 3 கருவேப்பிலை, மல்லித்தழை
- இஞ்சி - ஒரு சிறு துண்டு [மெல்லியதா வெட்டி வச்சுங்கங்க]
- பொரிகடலை - 2 மேசைக் கரண்டி
செய்முறை:
- உருளைகிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, அரை குறையாக உதிர்த்து வைங்க.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உள்ளுதம்பருப்பு , வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை போட்டு தாளித்து சிறிது தண்ணீர் விட்டு லேசாக வெங்காயத்தை வேக விடுங்க.
- மஞ்சள் தூளும், உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.
- தண்ணீர் சற்று வற்றியதும் உருளைகிழங்கு, மல்லித்தழை சேர்த்துக் கிளறி, சற்று புரட்டினாற்போல் இறக்கி,
- பொரிகடலை மாவை தூவிக் கிளருங்க.
- இட்லி தோசைக்குத் தயார் செய்த சட்டினியைச்சற்று கெட்டியாக வைக்கவும்.
- தோசைகல்லில் தோசை மாவை உதறி நைசாக விரித்து திருப்பிப்போட்டு பின் எடுக்கும் சமயம் பாதி தோசையில் ஒரு கரண்டி மசால் கிழங்கையும் சட்டினியையும் விரித்துவைத்து,
- மறுபாதி தொசையினால் மூடி பரிமாறவும்.
0 comments:
Post a Comment