Samaiyalarai
Showing posts with label சிற்றுண்டி வகைகள். Show all posts
Showing posts with label சிற்றுண்டி வகைகள். Show all posts
February 28, 2011
February 20, 2011
pakoda | பக்கடா
தேவை :
- கடலை மாவு -400 கிராம்
- அரிசி -100 கிராம்
- நெய் -1 கரண்டி
- எண்ணெய் - 1 கரண்டி
- முந்திரிபருப்பு - 25 கிராம்
- பூண்டு - 4 பல்
- சுடுவதற்கு எண்ணெய் -
- வெங்காயம் -100௦௦ கிராம்
- பச்சை மிளகாய் - 8
- இஞ்சி - சிறு துண்டு
- சோடா உப்பு - சிறிது
- கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
- ஒரு தாம்பாளத்தில் வெட்டிய வெங்காயம், மிளகாய், பூண்டு, இங்கி, நெய், எண்ணெய், உப்பு, சோடா உப்பு போட்டு நிறைக்கத் தேய்த்து,
- இரண்டு மாவும், முந்திரி பருப்பும் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்துத் தேய்த்து, கெட்டியாகப் பிசைந்து,
- எண்ணையில் உதிர்த்து விட்டு சிவக்க வெந்ததும் எடுங்க.
Labels: சிற்றுண்டி வகைகள், பக்கடா
பஜ்ஜி | paji | pajji
பஜ்ஜி
- பச்சரிசி - 400 ௦௦ கிராம்
- உளுத்தம்பருப்பு - 100 கிராம்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- வற்றல் - 4
- காயம் - சிறிதளவு
- பஜ்ஜிபொடி - 1 சிட்டிகை
செய்முறை:
- அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக ஊற வையுங்க.
- அரைமணி நேரம் ஊறவைத்த பின்பு பருப்பை இட்லிக்கு ஆட்டுவது போல் நன்றாக ஆட்டி எடுங்க.
- அரிசியை ஆட்டும் பொது வற்றல், காயம், உப்பு சேர்த்து நன்றாக ஆட்டி பஜ்ஜி பொடியையும் உளுந்து மாவையும் சேர்த்து நன்றாக கலக்குங்க.
- மாவு அதிகம் கெட்டியாக இல்லாமலும் இளக்கமாக இல்லாமலும் இருக்க வேண்டும்.
- வாணலியில் எண்ணையைக் காயவைத்து, பின்பு வாழைக்காய், கத்தரிக்காய், உருளைகிழங்கு, பெரிய வெங்காயம், குடை மிளகாய், அப்பளம், பிரியபட்டதை வளைக்கை சீவும் உதவியால் வெட்டி மாவில் தோய்த்து கையும் எண்ணெயில் சுட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுங்க.
குறிப்பு:
பஜ்ஜி மெதுவாக இல்லாவிட்டால் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கொள்ளலாம்.
ரொட்டியையும் பஜ்ஜி மாவில் தோய்த்து ரொட்டி பஜ்ஜி சுடலாம்.
Labels: சிற்றுண்டி வகைகள், பஜ்ஜி
February 19, 2011
ஆம வடை|aama vadai
ஆம வடை
தேவை:
- கடலை பருப்பு - 250 மி.லி.
- பெருஞ் சீரகம், பட்டை
- எண்ணெய்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- வெங்காயம்
- பச்சை மிளகாய் - 6
- கருவேப்பிலை
- மல்லிதழை
செய்முறை:
- 250 மி.லி. கடலை பருப்பை குறைந்தது முன்று மணி நேரம் ஊற வைத்துக் களைந்து ஒரு வடிதட்டில் தட்டி தண்ணிரை வடிய வைக்கவேண்டும்.
- உரலை நன்றாக துடைத்து விட்டு பருப்புடன் உப்பு ஒரு டீஸ்பூன் பெருஞ் சீரகம், பட்டை சிறிது போட்டு தண்ணீர் சேர்க்காமல் முக்கால் பாகமாக ஆட்டி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் 6 , கருவேப்பிலை, மல்லிதழை, போட்டு
- வாணலியில் எண்ணெயை கைய வைத்து மாவில் சிறு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி ,
- எண்ணெயில் போட்டு நன்றாக சிவந்தவுடன் எடுக்கவும்.
குறிப்பு:
கடலை பருப்புகுப் பதில் பட்டாணிப் பருப்பை பயன்படுத்தலாம்.
Labels: ஆம வடை, சிற்றுண்டி வகைகள்
உளுந்து வடை|ulundhu vadai
உளுந்து வடை
- உளுத்தம் பருப்பு
- ரிபைன்ட் ஆயில்
- சின்ன வெங்காயம் - 50 கிராம்
- பச்சை மிளகாய் - 6
- இஞ்சி - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மல்லிதழை - சிறிதளவு
- தட்டிய மிளகு - தேவைக்கு ஏற்ப
- உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
- ௦250 மி.லி. தோல் இல்லாத உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து,
- அதிக இளக்கம் இல்லாமல் பொங்க ஆட்டி தோண்டும் போது தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து , இரண்டு சுற்று சுற்றி தோண்டி,
- சின்ன வெங்காயம் வட்ட வட்டமாக பொடியாக நறுக்கியது , பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லிதழை, தட்டிய மிளகு இவற்றை போட்டு கலக்குங்க.
- வாணலியில் ரிபைன்ட் ஆயில்-ஐ காய வைத்து இலையில் தண்ணீர் தடவி மாவில் சிறு உருண்டை எடுத்து தட்டி நடுவில் ஒரு துவாரம் செய்து எண்ணெய் காய்ந்ததும் வடையை போட்டு
- வடைக் கம்பியால் திருப்பி விட்டு இரண்டு பக்கமும் சிவந்தவுடன் எடுக்கவும்.
மாவில் ஒரு மாசை கரண்டி அரிசி மாவு கலந்து சுட்டால் வடை மொரு மொறுப்பாக இருக்கும்.
Labels: உளுந்து வடை, சிற்றுண்டி வகைகள்
Subscribe to:
Posts (Atom)



