Samaiyalarai

February 3, 2011

ஆலு மசாலா | alu masala

ஆலு மசாலா
தேவையானவை: 
  1. உருளைக் கிழங்கு – அரை கிலோ
  2. பெரிய வெங்காயம் – 1
  3. இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  4. மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
  5. தனியா தூள் - 1 டீஸ்பூன்
  6. சீரகத் தூள் – தலா 1 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
  9. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் அல்லது
  10. மாங்காய் (அம்சூர்) தூள் – 2 டீஸ்பூன்
  11. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  12. உப்பு – தேவைக்கு
செய்முறை:
  • உருளைக் கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்குங்கள். 
  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  • இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்குங்கள்.
  • பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு துண்டுகள், உப்பு சேர்த்து, தீயை மிதமாக வைத்து நன்கு வதக்குங்கள்.
  • கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு அல்லது மாங்காய்த் தூள் சேர்த்து, கிழங்கு நன்கு வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP