ஈஸி குருமா | easy kurma
தேவையானவை:
- நீங்கள் விரும்புகிற காய்கறிகள் – 2 கப்
- பெரிய வெங்காயம் – 1
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவைக்கு
அரைக்க:
- தேங்காய்த் துருவல் – 1 கப்
- இஞ்சி – 1 சிறிய துண்டு
- பூண்டு – 2 பல்
- பச்சை மிளகாய் – 4
- சோம்பு – கால் டீஸ்பூன்
- பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
- முந்திரிப்பருப்பு – 6
- கசகசா – 1 டீஸ்பூன்
- பட்டை - 1
- லவங்கம் - 1
- ஏலக்காய் – 1
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள்.
- காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள்.
- எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை 5 நிமிடம் வதக்கி, இறக்கி, ஆறவிட்டு நைஸாக அரையுங்கள்.
- இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள்.
- வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
- செய்வதற்கும் ரொம்ப ஈஸி இந்த குருமா
குறிப்பு:
இந்த குருமாவில் மீல்மேக்கர் சேர்க்க விரும்புகிறீர்களா? மீல்மேக்கர் உருண்டைகளை, கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து, பிறகு அவற்றைப் பச்சைத் தண்ணீரில் போட்டு 2 முறை கழுவி, 2 துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தை வதக்கும்போதே, இவற்றையும் சேர்த்து வதக்கி, சேர்த்துக் கொள்ளவேண்டியதுதான்.
0 comments:
Post a Comment