மசாலா குருமா | masala kurma
மசாலா குருமா
தேவையானவை:
- எதாவது காய் [தங்கள் விருப்பதிர்கேற்ப] கலந்ததாகவோ அல்லது தனியாகவோ நறுக்கியது – 2 கப்
- வெங்காயம் – 3
- தக்காளி – 4
- உப்பு – தேவைக்கு ஏற்ப
- சோம்பு – அரை டீஸ்பூன்
- பிரிஞ்சி இலை – ௧
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
அரைக்க:
- இஞ்சி – 1 துண்டு
- பூண்டு – 5 பல்
- சோம்பு - அரை டீஸ்பூன்
- சீரகம் - அரை டீஸ்பூன்
- மிளகாய்த் தூள் – இரண்டரை டீஸ்பூன்
- தனியா தூள் – ஒரு டீஸ்பூன்
- தேங்காய்த் துருவல் – அரை கப்
- பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
- பட்டை - 1
- லவங்கம் - 1
- ஏலக்காய் – 1
செய்முறை:
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள்.
- வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
- இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.
- இதனுடன் வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், தக்காளி, காய்(கள்), அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள்.
- காய்கறி(கள்) வெந்து, பச்சை வாசனை போன பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்குங்கள்.
0 comments:
Post a Comment