Samaiyalarai

February 3, 2011

சன்னா மசாலா | chana masala

சன்னா மசாலா



தேவையானவை:


  1. சன்னா – 1 கப்
  2. பெரிய வெங்காயம் – 2
  3. தக்காளி – 4
  4. இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  5. பூண்டு – 2 பல்
  6. மிளகாய்த் தூள்
  7. தனியா தூள் – 1 டீஸ்பூன்
  8. பட்டை - 1
  9. லவங்கம் - 1
  10. ஏலக்காய் – 1
  11. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
  12. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  13. உப்பு – தேவைக்கு




செய்முறை:


  • சன்னாவை 6 முதல் 8 மணி நேரம் ஊறவையுங்கள்.
  • பிறகு, அதனுடன் தேவையான உப்பு சேர்த்து, குக்கரில் வேகவையுங்கள். 
  • வெங்காயம், தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள்.
  • இதனுடன் தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்கி, இறக்கி ஆறவிட்டு, எல்லாவற்றையும் நைஸாக அரைத்தெடுங்கள்.
  • இப்போது வெந்த சன்னாவுடன் அரைத்த விழுதை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.


0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP