பூண்டு இல்லாத குருமா | kurma
பூண்டு இல்லாத குருமா
தேவையானவை:
- நீங்கள் விரும்பும் காய்கறிகள் (நறுக்கியது) – 2 கப்
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 3
- தேங்காய்த் துருவல் – 1 கப்
- முந்திரிப்பருப்பு – 6
- உப்பு – தேவைக்கு
அரைக்க:
- சோம்பு – அரை டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4 அல்லது 5
- இஞ்சி – 1 துண்டு
- மல்லித்தழை – ஒரு கைப்பிடி
தாளிக்க:
- பட்டை - 2
- லவங்கம் - 2
- ஏலக்காய் - 2
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள்.
- வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
- தேங்காய்த் துருவலையும் முந்திரியையும் அரைத்துத் தனியே வையுங்கள்.
- பிறகு, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரையுங்கள்.
- இப்போது, எண்ணெய், நெய் இரண்டையும் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள்.
- வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
- இதனுடன் தேங்காய் விழுது, வேகவைத்த காய்கறி சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
பூண்டு விரும்பாதவர்களுக்கான ஸ்பெஷல் குருமா
0 comments:
Post a Comment