Samaiyalarai

February 3, 2011

கோபி மசாலா | gobi masala

கோபி மசாலா



தேவையானவை:

  1. காலிஃப்ளவர் – சிறிய பூவாக 1
  2. பெரிய வெங்காயம் – 2
  3. தக்காளி – 4
  4. எண்ணெய் – 3 
  5. டேபிள் ஸ்பூன்
  6. உப்பு – தேவைக்கு ஏற்ப

தாளிக்க:
  1. பட்டை – 1
  2. சீரகம் – அரை டீஸ்பூன்

அரைக்க:
  1. இஞ்சி – 1 துண்டு
  2. பூண்டு – 6 பல்
  3. மிளகாய்த் தூள்
  4. கசகசா – தலா 2 டீஸ்பூன்
  5. தனியா தூள் - 1 டீஸ்பூன்
  6. மிளகு – தலா 1 டீஸ்பூன்
  7. சோம்பு - அரை டீஸ்பூன்
  8. சீரகம் – அரை டீஸ்பூன்
  9. முந்திரிப் பருப்பு – 8


செய்முறை:

  • காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேருங்கள். அதில், பத்து நிமிடங்கள் காலிஃப்ளவரை போட்டு, வெளியில் எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக்குங்கள்.
  • வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
  • அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
  • வெங்காயம் வதங்கி, நிறம் மாறியதும், தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைப் போட்டு, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
  • தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP