தக்காளி குருமா | tomato kurma
தக்காளி குருமா
தேவையானவை:
- பெ. வெங்காயம் – 3
- தக்காளி – 6 முதல் 8 வரை
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- தேங்காய்த் துருவல் – 1 கப்
- கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
- பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கு
- கறிவேப்பிலை – சிறிது
அரைக்க:
- இஞ்சி – 1 துண்டு
- பூண்டு – 4 பல்
- பச்சை மிளகாய் – 6
- பட்டை, லவங்கம் – தலா 1
- சோம்பு – கால் டீஸ்பூன்
- மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
செய்முறை:
- வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள்.
- பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.
- எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள்.
- வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
- பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
0 comments:
Post a Comment