Samaiyalarai

February 3, 2011

புதினா குருமா | pudina kurma

புதினா குருமா



தேவையானவை:


  1. பச்சை பட்டாணி – 1 கப்
  2. பெரிய வெங்காயம் – 2




தாளிக்க:

  1. பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2
  2. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்


அரைக்க:

  1. ஆய்ந்து, அலசி, கழுவிய புதினா – 1 கட்டு
  2. தேங்காய்த்துருவல் – 1 கப்
  3. இஞ்சி – 1 துண்டு
  4. பூண்டு – 3 பல்
  5. பச்சை மிளகாய் – 5
  6. சோம்பு – அரை டீஸ்பூன்
  7. முந்திரிப் பருப்பு – 6
  8. பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
  9. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்




செய்முறை:

  • பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள்.
  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள்.
  • சிறிது எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள்.
  • இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
  • வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி, பட்டாணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP