Samaiyalarai

February 3, 2011

பெப்பர் பீஸ் மசாலா | pepper spice masala

பெப்பர் பீஸ் மசாலா




தேவையானவை:


  1. பட்டாணி – 2 கப்
  2. பெரிய வெங்காயம் – 3
  3. தக்காளி – 4
  4. இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  6. கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
  7. மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
  8. தனியா தூள் – 1 டீஸ்பூன்
  9. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  10. கறிவேப்பிலை – கைப்பிடியளவு
  11. உப்பு – சிறிதளவு




வறுத்துப் பொடிக்க:

  1. மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  2. சீரகம் – 2 டீஸ்பூன்
  3. சோம்பு – அரை டீஸ்பூன்


செய்முறை:


  • பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள்.
  • வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
  • பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை, வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்குங்கள்.
  • வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
  • அதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள்.
  • பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
  • கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் பெப்பர் பீஸ் மசாலா தயார்...

0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP