தம் ஆலு மசாலா | dum aloo masala
தம் ஆலு மசாலா
தேவையானவை:
- உருளைக்கிழங்கு – அரை கிலோ
- பெ. வெங்காயம் – 3
- தக்காளி – 3
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- தக்காளி – 3
- எண்ணெய்
- உப்பு – தேவைக்கு
பொடிக்க:
- காய்ந்த மிளகாய் – 4
- மிளகு, தனியா – தலா 2 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பட்டை - 1
- ஏலக்காய் – 1
செய்முறை:
- உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சற்றே பெரிய துண்டுகள் ஆக்குங்கள்.
- எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய துண்டுகளைப் பொரித்தெடுங்கள்.
- பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை, வெறும் கடாயில் வறுத்து, பொடித்துக்கொள்ளுங்கள்.
- தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள்.
- இப்போது, மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
- வெங்காயம் வதங்கியதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள்.
- பச்சை வாசனை போனதும், பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள், பொடித்து வைத்துள்ள பொடி தூவி, தக்காளி, தேவையான உப்பு, தயிர் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.
குறிப்பு:
தக்காளி விருப்பமில்லாதவர்கள், மாங்காய்த் தூள் ஒரு டீ ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment