ஆம வடை|aama vadai
ஆம வடை
தேவை:
- கடலை பருப்பு - 250 மி.லி.
- பெருஞ் சீரகம், பட்டை
- எண்ணெய்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- வெங்காயம்
- பச்சை மிளகாய் - 6
- கருவேப்பிலை
- மல்லிதழை
செய்முறை:
- 250 மி.லி. கடலை பருப்பை குறைந்தது முன்று மணி நேரம் ஊற வைத்துக் களைந்து ஒரு வடிதட்டில் தட்டி தண்ணிரை வடிய வைக்கவேண்டும்.
- உரலை நன்றாக துடைத்து விட்டு பருப்புடன் உப்பு ஒரு டீஸ்பூன் பெருஞ் சீரகம், பட்டை சிறிது போட்டு தண்ணீர் சேர்க்காமல் முக்கால் பாகமாக ஆட்டி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் 6 , கருவேப்பிலை, மல்லிதழை, போட்டு
- வாணலியில் எண்ணெயை கைய வைத்து மாவில் சிறு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி ,
- எண்ணெயில் போட்டு நன்றாக சிவந்தவுடன் எடுக்கவும்.
குறிப்பு:
கடலை பருப்புகுப் பதில் பட்டாணிப் பருப்பை பயன்படுத்தலாம்.
0 comments:
Post a Comment