உளுந்து வடை|ulundhu vadai
உளுந்து வடை
- உளுத்தம் பருப்பு
- ரிபைன்ட் ஆயில்
- சின்ன வெங்காயம் - 50 கிராம்
- பச்சை மிளகாய் - 6
- இஞ்சி - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மல்லிதழை - சிறிதளவு
- தட்டிய மிளகு - தேவைக்கு ஏற்ப
- உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
- ௦250 மி.லி. தோல் இல்லாத உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து,
- அதிக இளக்கம் இல்லாமல் பொங்க ஆட்டி தோண்டும் போது தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து , இரண்டு சுற்று சுற்றி தோண்டி,
- சின்ன வெங்காயம் வட்ட வட்டமாக பொடியாக நறுக்கியது , பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லிதழை, தட்டிய மிளகு இவற்றை போட்டு கலக்குங்க.
- வாணலியில் ரிபைன்ட் ஆயில்-ஐ காய வைத்து இலையில் தண்ணீர் தடவி மாவில் சிறு உருண்டை எடுத்து தட்டி நடுவில் ஒரு துவாரம் செய்து எண்ணெய் காய்ந்ததும் வடையை போட்டு
- வடைக் கம்பியால் திருப்பி விட்டு இரண்டு பக்கமும் சிவந்தவுடன் எடுக்கவும்.
மாவில் ஒரு மாசை கரண்டி அரிசி மாவு கலந்து சுட்டால் வடை மொரு மொறுப்பாக இருக்கும்.
0 comments:
Post a Comment