காளான் சூப் | mushroom soup
காளான் சூப்
தேவையான பொருட்கள்:
- காளான் - 50 கிராம்
- தண்ணீர் - 250 மி.லி.
- தக்காளி - 1
- வெங்காயம் - 1
- இஞ்சி, கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி, புதினா - சிறிது
- மிளகுத்தூள், சீரகத்தூள் - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- கார்ன் ப்ளார் - 2 டீஸ்பூன்
செய்முறை:
தக்காளி, வெங்காயம் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காளானை நன்றாகக் கழுவி நறுக்கி தண்ணீரில் வேக வைக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் சமயம் மசித்து அடுப்பைக் குறைத்து ஆறும் முன் வடிகட்டவும். கார்ன் ப்ளாரை கட்டிகள் இல்லாமல் தண்ணீரில் கரைத்து சூப் கெட்டியாவதற்கு ஊற்றி கொதிக்க விடவும். கடைசியில், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தூவி பரிமாறவும்.
Zumba Fitness Total Body Transformation System DVD Set
Zumba Fitness Total Body Transformation System DVD Set
0 comments:
Post a Comment